கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் 'மொலாசஸ்' மீதான ஜி.எஸ்.டி. வரி 5% ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன் தகவல்


கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் மொலாசஸ் மீதான ஜி.எஸ்.டி. வரி 5% ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன் தகவல்
x

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘மொலாசஸ்’ மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதன்படி, கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் 'மொலாசஸ்' மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றும், அவர்களின் கடன் தொகையை விரைவாக செலுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.

சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாவு, பாக்கெட் மூலம் விற்கப்பட்டால் அதற்கான ஜி.எஸ்.டி. வரி 5% ஆக குறைக்கப்படும் என்றும், பாக்கெட் செய்யப்படாத சிறுதானிய மாவுக்கு ஜி.எஸ்.டி. வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதே போல் ENA எனப்படும் தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே விடப்பட்டுள்ளதாகவும், தொழில்துறை உபயோகத்திற்கான தூய்மையான ஆல்கஹால் மீது 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


Next Story