ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி


ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி
x

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது.

புதுடெல்லி,

ஆகஸ்ட் மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆகஸ்ட் மாதம் வசூலான ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி ஆகும்.

செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story