மே மாதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.57 லட்சம் கோடி வசூல்


மே மாதம் ஜிஎஸ்டி வரியாக  ரூ.1.57 லட்சம் கோடி வசூல்
x

மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி, மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது,. இதில், சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது. 2023 மே மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.

மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது, இவற்றில் தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.8,953 கோடி வசூல்.

அதே போல் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்


Next Story