ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
Live Updates
- 22 Jan 2024 11:15 AM IST
சீதை பிறந்த இடமான நேபாளத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜானகி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
- 22 Jan 2024 11:10 AM IST
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
- 22 Jan 2024 11:05 AM IST
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்,ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அனன்யா பிர்லா, நடிகர்கள் மாதுரி தீட்சித், விக்கி கவுஷல், கத்ரீனா கைப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், அலியா பட் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி வருகை தந்துள்ளனர்.
- 22 Jan 2024 11:02 AM IST
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வந்தடைந்தார்.
- 22 Jan 2024 11:00 AM IST
சனாதன தர்மம் இன்று நிலைநாட்டப்பட்டுவிட்டது -யோகா குரு பாபா ராம்தேவ்
அயோத்தி ராமர் கோவிலில் திறக்கப்படுவதன் மூலம் சனாதன தர்மம் இன்று நிலைநாட்டப்பட்டுவிட்டது. ராம ராஜ்ஜியம் இன்று நடைமுறைக்கு வருகிறது- யோகா குரு பாபா ராம்தேவ்
- 22 Jan 2024 10:57 AM IST
உற்சாக வெள்ளத்தில் கரை புரளும் சரயு நதி
கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்; படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால், பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே என அன்று அயோத்தி நகரின் பொலிவு இழந்ததாக கம்பர் குறிப்பிடுகிறார்.. இன்று அயோத்திக்கு ராமர் திரும்பியதால் சரயு நதி பெருக்கெடுத்தது போல பெரு உற்சாகம் கரை புரள்கிறது
- 22 Jan 2024 10:50 AM IST
இது கடவுள் கொடுத்த வாய்ப்பு - நடிகர் சிரஞ்ச்சீவி
நடிகர் சிரஞ்சீவி அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் பிரான் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார். இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இங்கு இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
- 22 Jan 2024 10:45 AM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
- 22 Jan 2024 10:40 AM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா பாகேஷ்வர் தாமின் தீரேந்திர சாஸ்திரி, யோகா குரு ராம்தேவ், சுவாமி சித்தானந்த சரஸ்வதி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
- 22 Jan 2024 10:37 AM IST
புதுச்சேரியில் 233 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பொதுமக்கள் காணும் வகையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் கோவில்கள், பொது இடங்கள் உட்பட மொத்தம் 233 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளது.