விலை உயர்வை தடுக்க 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை உயர்வை தடுக்க 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
பருவ மழையால் வரத்து குறைந்ததன் காரணமாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சூழலில் வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. ஒருவேளை வெங்காயத்தின் விலை உயரும் பட்சத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் இந்த கையிருப்பு வெங்காயம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வெங்காயத்தை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கும் விதமாக வெங்காயத்தின் ஆயுளை அதிகரிக்க கதீர்வீச்சை பயன்படுத்துவது குறித்து பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story