நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார்


நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார்
x

நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வால். இவர் தெலுங்கானா முதல்-மந்திரியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். சுமிதா சபர்வாலின் வீடு ஐதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வாலின் வீட்டிற்குள் நேற்று இரவு அத்துமீறி ஆண் நுழைத்துள்ளார். வீட்டிற்குள் வேறொரு நபர் நுழைத்திருப்பதை அறித்த சுமிதா உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் தகவல் கொடுத்தார்.

உடனடியாக, வீட்டில் சோதனை நடத்திய பாதுகாவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆனந்த் என்பது தெரியவந்தது. அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ஆனந்த் தனது நண்பருடன் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனந்தின் நண்பர் அந்த வீட்டிற்கு வெளியே காரில் இருந்துள்ளார். அவரையும் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர், பிடிபட்ட 2 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

பதவி உயர்வு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுமிதாவை சந்தித்து பேசவந்ததாக கைது செய்யப்பட்ட துணை தாசில்தார் ஆனந்த் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா புகார் அளித்தார். பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் நள்ளிரவில் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story