ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அசல்பூர் ஜாப்னர் மற்றும் ஹிர்னோடா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீட்கப்பட்டு ரெயிலுடன் இணைக்கப்பட்டன. அதை தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
எனினும் இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் 7 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story