கோவா சர்வதேச விமான நிலையம் செயல்பட தொடங்கியது; பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு


கோவா சர்வதேச விமான நிலையம் செயல்பட தொடங்கியது; பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு
x

பிரதமர் மோடி தொடங்கி வைத்த கோவா சர்வதேச விமான நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.



பனாஜி,


கோவாவில் தபோலிமில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் மோபா சர்வதேச விமான நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்பின்னர், கோவாவின் 2-வது விமான நிலையம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மோபா மனோகர் என்ற இந்த விமான நிலையத்தில் விமானம் ஒன்று வந்திறங்கி உள்ளது.

அதில் இருந்து வந்த பயணிகளுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகள் வெளிவரும் பகுதியில் அவர்களுக்கு விமான நிலையம் சார்பில் பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரூ.2 ஆயிரத்து 870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை புதிதாக அமைகின்றன. மேலும் கோவாவில் விமான பயணிகளை கையாளும் திறன் ஒரு கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்.

கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்துடன், நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.



Next Story