உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அறிமுகம் செய்யப்படும் என ஜி20 மாநாட்டில் இந்தியா அறிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் 'ஒரே பூமி' என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு. இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும். இந்த முயற்சியில் ஜி20 நாடுகள் சேரவேண்டும்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story