ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் - ராஜ்நாத்சிங் பாராட்டு
ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி,
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க ஜி-20 மாநாடு நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, உலக அரங்கில் இந்தியாவின் தலைமைக்கு அழியாத முத்திரையை பெற்று தந்துள்ளது.
உக்ரைன் போர் தொடர்பான பிரகடனத்துக்கு கருத்தொற்றுமை ஏற்படுத்தியது, உலக அளவில் நம்பிக்கையை உருவாக்குவதில் ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மைல்கல். இது, நாடுகளை ஒன்றுதிரட்டக்கூடிய இந்தியாவின் திறமையை காட்டுகிறது.
உலக குருவாகவும், உலக நண்பனாகவும் இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story