ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பானிபூரி, சாட் போன்ற உணவு வகைகளை ருசிக்க ஏற்பாடு


ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பானிபூரி, சாட் போன்ற உணவு வகைகளை ருசிக்க ஏற்பாடு
x

ஜி20 உச்சி மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்கள் பானிபூரி, சாட் போன்ற உணவு வகைகளை ருசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான உலக தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது.

அண்மையில், ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு வந்த ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி வோல்கர் விஸ்ஸிங் இந்தியாவில் பணம் செலுத்த யுபிஐ முறையை பயன்படுத்தினார். யுபிஐ கட்டண அனுபவத்தால் வோல்கர் விஸ்ஸிங் மிகவும் ஈர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் மாடலைப் பற்றியும் உயர்வாகப் பேசியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் பண பரிவர்த்தனை முறையை மாற்றியமைத்த யுபிஐ மாயாஜாலத்தை ஜி20 பிரதிநிதிகளுக்கு டெல்லி காட்டவுள்ளது. மேலும், ஜி20 பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்திய தெரு உணவுகள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு உணவு வழங்குவதை முன்னணி ஹோட்டல் நிறுவனமாக ஐடிசி கையாள்கிறது என்றார்.


Next Story