மணிப்பூர் முதல் மராட்டியம் வரை...13 மாநிலங்கள்,6 ஆயிரத்து 700 கி.மீ. - நாளை பாரத் நியாய யாத்திரை தொடங்கும் ராகுல்காந்தி...!


மணிப்பூர் முதல் மராட்டியம் வரை...13 மாநிலங்கள்,6 ஆயிரத்து 700 கி.மீ. - நாளை பாரத் நியாய யாத்திரை தொடங்கும் ராகுல்காந்தி...!
x
தினத்தந்தி 13 Jan 2024 4:41 PM IST (Updated: 13 Jan 2024 5:34 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி 'பாரத் நியாய யாத்ரா' வை நாளை மணிப்பூரில் இருந்து தொடங்குகிறார்.

இம்பால்,

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது இரண்டாவது யாத்திரையை நாளை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை மணிப்பூரில் இருந்து 'பாரத் நியாய யாத்ரா' என்ற பெயரில் நடத்தப்படும். இந்த நடைப்பயணம் 14 மாநிலங்களை கடந்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி முடிவடைகிறது.

பாஜக அரசு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மக்களை மறந்தது. மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப பாஜக அரசு அனுமதிக்காததால் பாரத் நியாய யாத்திரை நடத்தப்பட உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் . இந்த யாத்திரையை மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைக்க உள்ளார்.

பாரத் நியாய யாத்திரையின் பயண விவரம்:-

* 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த யாத்திரை நாளை மணிப்பூரில் இருந்து மராட்டியத்தின் மும்பை வரையிலான 67 நாட்கள் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார்.

* 6,713 கி.மீ தூரம் கொண்ட இந்த யாத்திரை பெரும்பாலும் பேருந்துகளிலும் சில இடங்களில் நடைப்பயணமாக மேற்கொள்ள உள்ளார்.

* மணிப்பூரில் நாளை யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி முதல்நாளில் மணிப்பூர் யாத்திரையை நிறைவு செய்து நாகலாந்து செல்கிறார்.

* நாகாலாந்தில் 2 நாட்களில் 5 மாவட்டங்களில் 257 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு அசாம் செல்கிறார்.

* அசாமில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு அருணாச்சலபிரதேசம் செல்கிறார்.

* அருணாச்சலபிரதேசத்தில் 1 நாள் பயணம் மேற்கொண்டு மேகாலயா செல்கிறார்.

* மேகாலயாவில் 1 நாள் பயணம் மேற்கொண்டு மேற்கு வங்காளம் செல்கிறார்.

* மேற்குவங்காளத்தில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 523 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு பீகார் செல்கிறார்.

* பீகாரில் 4 நாட்களில் 7 மாவட்டங்களில் 425 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு ஜார்கண்ட் செல்கிறார்.

* ஜார்கண்டில் 8 நாட்களில் 13 மாவட்டங்களில் 804 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு ஒடிசா செல்கிறார்.

* ஒடிசாவில் 4 நாட்களில் 4 மாவட்டங்களில் 341 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு சத்தீஷ்கார் செல்கிறார்.

* சத்தீஷ்காரில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 536 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு உத்தர பிரதேசம் செல்கிறார்.

* உத்தர பிரதேசத்தில் 11 நாட்களில் 20 மாவட்டங்களில் 1,074 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மத்திய பிரதேசம் செல்கிறார்.

* மத்திய பிரதேசத்தில் 7 நாட்களில் 9 மாவட்டங்களில் 698 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு குஜராத் செல்கிறார்.

* குஜராத்தில் 5 நாட்கள் 445 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மராட்டியம் செல்கிறார்.

* மராட்டியத்தில் 5 நாட்கள் 479 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மும்பையில் யாத்திரையை மார்ச் 20 அல்லது 21-ம் தேதிகளில் முடிக்க உள்ளார்.

ராகுல் காந்தி இந்த யாத்திரையின்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளுடன் உரையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story