அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா குற்றவாளி- சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா குற்றவாளி- சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2010-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி விகாஸ் துல் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் மீதான விசாரணையை மே 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இளநிலை ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சவுதாலா, தண்டனைக் காலத்தை முடித்து கடந்த ஆண்டு ஜூலையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story