மே.வங்க முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை


மே.வங்க முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை
x

மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியான புத்ததேவ் பட்டாச்சார்யா (79) மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரை மேற்குவங்காளத்தின் முதல்-மந்திரியாக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 5 தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் சேவையாற்றியதன் மூலம் தேசிய அளவில் மிகவும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவராக கருதப்படுகிறார். முதுமை மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால் ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story