வாடகை ஆட்டோக்களுக்கு புதிய செயலிகள் அறிமுகம்


வாடகை ஆட்டோக்களுக்கு   புதிய செயலிகள் அறிமுகம்
x

வாடகை ஆட்டோக்களுக்கு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் வாடகை ஆட்டோ சேவையை வழங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ சங்கங்கள் வாடகை ஆட்டோ சேவை வழங்குவதற்கு வசதியாக நம்ம யாத்ரி என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து அரசு அனுமதியோடு வாடகை ஆட்டோ சேவைக்கான செல்போன் செயலிகளின் அறிமுகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மற்றொரு ஆட்டோ சங்கம் ரூக் என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலி மூலம் வேண்டிய இடங்களுக்கு வாடகை ஆட்டோக்களை பதிவு செய்து பயணிக்கலாம் என ஆட்டோ சங்கம் தெரிவித்துள்ளது.




Next Story