நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை


நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2022 9:36 AM IST (Updated: 4 Sept 2022 9:40 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஐதராபாத்,

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தில் இருக்குமா? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், 'இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என நான் நம்புகிறேன். அதற்காக உழைத்து வருகிறோம். பொருளாதார மந்தநிலையின் பிடியில் நாடு இல்லை என்றால் அது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கசக்தியாக இருக்கும்' என்று கூறினார்.

மேலும் அவர், 'குறைந்த அடித்தளம் தான் அதிக வளர்ச்சி விகிதம் என்று சிலர் வாதிடலாம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். உண்மையில் நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்தான்' என்றும் தெரிவித்தார்.

இலவசங்கள் குறித்த கேள்விக்கு பதிளிக்கும்போது, 'இது பற்றிய விவாதத்தில் நாம் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எதையாவது இலவசமாகக் கொடுக்கிறீர்கள் என்றால் அதற்கு யாரோ பணம் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்' என்று கூறினார்.


Next Story