பயர் ஹேர்கட் செய்து கொண்டவர் உடல் முழுவதும் தீ பரவி ஆபத்தான நிலையில் சிகிச்சை
பயர் ஹேர்கட் செய்து கொண்டவரின் உடல் முழுவதும் தீ பரவி ஆபத்தான நிலையில் சிகிச்சைச்சை பெற்று வருகிறார்.
அகமதாபாத்
தீயால் தலைமுடிய வெட்டிக்கொள்ளும் (பயர் ஹேர்கட்) சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது.இது சிகையலங்கார நிபுணர்கள் வாடிக்கையாளரின் தலைமுடியில் நெருப்பைப் பயன்படுத்தி ஸ்டைலாக அமைக்கும் ஒரு செயல்முறையாகும்.
இதுபோல் தீயினால் ஹேர் கட் செய்யும் போது ஒருவருக்கு உடல் முழுவதும் தீ பற்றி மிகவும் ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சைபெற்ற வருகிறார்.
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரில் உள்ள சலூனில் இந்த சமபவம் நடந்து உள்ளது.
புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், ஒரு நபர் தனது முகத்தை டவலால் மூடிக் கொண்டு ஹேர்கட் செய்ய அமர்ந்திருப்பதைக் காணலாம். ஒரு கையில் சீப்பையும், இன்னொரு கையில் தீப்பெட்டியையும் பிடித்திருப்பதைக் காணக்கூடிய முடிதிருத்தும் நபர், தீக்குச்சியைக் கொளுத்திவிட்டு, சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை மீறி தீ எரிந்து உடல் முழுவதும் பரவியது.
பாதிக்கப்பட்டவரின் கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், வாபியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து அவர் வல்சாட்டில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் வாபி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து விசாரணை அதிகாரி கரம்சிங் மக்வானா கூறும் போது பாதிக்கப்பட்டவர் மற்றும் சிகையலங்கார நிபுணரின் வாக்குமூலங்களை பெறுவதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றார். "பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பெற முயற்சிக்கிறோம் என கூறினார்.
முடி வெட்டுவதற்காக தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால், பாதிக்கப்பட்டவரின் மேல் உடல் பாகங்கள் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.