சட்டக்கல்லூரி நூலகத்தில் மத உணர்வை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய புத்தகம்.. கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
சட்டக் கல்லூரி நூலகத்தில் சர்ச்சைக்குரிய புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சட்டக் கல்லூரி நூலகத்தில் சர்ச்சைக்குரிய புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மற்றும் நிறுவனத்தின் முதல்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சட்டக்கல்லூரி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் இந்தப் புத்தகத்தில், மதத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்து சமூகம் மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான மிகவும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் இருப்பதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) குற்றம் சாட்டுகிறது.
ஏபிவிபி பிரிவின் தலைவர் திபேந்திர சிங் தாக்கூர் கூறுகையில், "டாக்டர். பர்ஹத் கானின் "குழு வன்முறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு" என்ற புத்தகத்தில், இந்து சமூகம், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி போன்ற அமைப்புகளுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன" என்றார். ஏபிவிபி அமைப்பினர் சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரியில் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சர்ச்சை எழுந்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் நூலகத்தில் இருந்து புத்தகத்தை அவசர அவசரமாக அகற்றியுள்ளது. இதனிடையே, சர்ச்சை தீவிரமடைந்ததால், கல்லூரி முதல்வர் டாக்டர் ஏனாமுர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறுகையில், "குழு வன்முறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு" என்ற தலைப்பில் நூலகத்தில் சர்ச்சைக்குரிய புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர் டாக்டர் பர்ஹத் கான், அமர் லா பப்ளிகேஷன்ஸின் ஹிதேஷ் கேத்ரபால், கல்லூரி முதல்வர் டாக்டர் இனாமூர் ரஹ்மான், கல்லூரி பேராசிரியரான மிர்சா மோஜிஸ் பெய்க் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களிடையே மதநல்லிணக்கத்தை காயப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம் இருந்தததாக, கல்லூரி மாணவர்களின் புகாரின் பேரில் இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.