பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை விரட்ட கரடியாக மாறும் விவசாயிகள்


பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை விரட்ட கரடியாக மாறும் விவசாயிகள்
x

லக்கிம்பூர் கேரியில் உள்ள ஜஹான் நகர் கிராமத்தில் விவசாயிகள் குரங்குகளால் அச்சம் அடைந்துள்ளனர்.

லக்னோ,

விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை விரட்ட விவசாயிகள் கரடி வேடமணிந்து சோளக்காட்டு பொம்மை போல் நிலத்தில் நிற்கும் விநோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

லக்கிம்பூர் கேரியில் உள்ள ஜஹான் நகர் கிராமத்தில் விவசாயிகள் குரங்குகளால் அச்சம் அடைந்துள்ளனர். ஏனெனில் அப்பகுதியில் 40 முதல் 45 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்புகளைக் களவாடுகின்றன. பயிர்களை சேதப்படுத்துகின்றன. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் குரங்குகளுக்கு பயந்து போய், விவசாயிகளே 4 ஆயிரம் ரூபாய்க்கு கரடி உடையை வாங்கி, அதை அணிந்து கொண்டு விவசாய நிலத்தில் சோளக்காட்டு பொம்மை போல் அமர்ந்து குரங்குகளை பயமுறுத்தி வருகின்றனர்.


Next Story