டெல்லியில் ஜந்தர் மந்தரில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம் - தமிழக விவசாயிகளும் பங்கேற்பு


டெல்லியில் ஜந்தர் மந்தரில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம் - தமிழக விவசாயிகளும் பங்கேற்பு
x

இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்தும் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.



Next Story