மின்சாரம் தாக்கி விவசாயி பலி
சிக்கமகளூருவில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பேக்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காந்தராஜ்(வயது 45). விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க போடப்பட்டிருந்த மின்வேலியை காந்தராஜ் எதிர்பாராதவிதமாக உரசியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி காந்தராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து தோட்ட உரிமையாளர் பசவராஜ் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான பசவராஜை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story