கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரள வாலிபர் கைது


கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரள வாலிபர் கைது

பெங்களூரு:

பெங்களூரு லால்பாக் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு காரில் ஒரு வாலிபர் வந்தார். அவர், ரூ.900-க்கு தனது காருக்கு பெட்ரோல் நிரப்பும்படி கூறினார். அதன்படி, பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரும் பெட்ரோல் நிரப்பினார். அதற்கு வாலிபர் ஒரு 500 ரூபாய் நோட்டும், நான்கு 100 ரூபாய் நோட்டும் வழங்கினார். ஆனால் வாலிபர் வழங்கிய ரூ.500 கள்ளநோட்டு போல் இருந்தது. இதுபற்றி சந்தேகம் அடைந்த ஊழியர், வில்சன்கார்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்திய போது 500 ரூபாய் முக மதிப்புடைய ரூ.22,500 கள்ளநோட்டுகள் இருந்தது. இதையடுத்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அகில் ஜார்ஜ் என்று தெரிந்தது. இவர், மேலும் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கள்ளநோட்டுகளை கொடுத்து பெட்ரோல் நிரப்பி இருந்ததும் தெரியவந்தது. கைதான வாலிபரிடம் இருந்து 500 முக மதிப்புடைய ரூ.22,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வில்சன்கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story