சமூக வலைதளங்களில் வைரலாகும் 188 வயது முதியவர்: யார் இவர்... உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் வைரலாகும் 188 வயது முதியவர்: யார் இவர்... உண்மை என்ன?
x
தினத்தந்தி 4 Oct 2024 5:40 PM GMT (Updated: 4 Oct 2024 6:33 PM GMT)

முதியவர், கூன்முதுகு மற்றும் வெள்ளை தாடியுடன், கைத்தாங்கலாக ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பயன்படுத்துகிறார்.

போபால்,

பெங்களூரூ அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்சர்ன்டு சிட்டிசன் என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 30 மில்லியன் பார்வைகளுக்கும் மேல் பெற்றுள்ளன. அவரது பதிவில் "இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது.

24-வினாடி கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், இரண்டு நபர்கள் முதியவருக்கு நடக்க உதவுகிறார்கள்.முதியவர், கூன்முதுகு மற்றும் வெள்ளை தாடியுடன், ஆதரவாக ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பயன்படுத்துகிறார். இந்த வீடியோவை பலரும் பதிவேற்றி, 188 வயது நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்ப, எக்ஸ் தளத்தில் இதற்கு மறுப்புரை வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில் உள்ள நபருக்கு 110 வயது இருக்கும் என்றும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்து துறவி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு ஜூலை 2 தேதியிட்ட நவ்பாரத் டைம்ஸின் கட்டுரையை வீடியோவின் கீழே குறிப்பிட்டு, அந்த வீடியோவில் உள்ள முதியவரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தியது.

அந்த அறிக்கையின்படி, சியாராம் பாபா என்ற அந்த முதியவருக்கு வயது 109. சியாரம் பாபா மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. தரவு சரிபார்ப்புக் குழுவான டி-இன்டென்ட் டேட்டாவும், வைரல் வீடியோ தவறு எனத் தெரிவித்துள்ளது. டி-இன்டென்ட் டேட்டா தனது அறிக்கையில், "இன்ப்ளூயன்சர்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளது.



Next Story