வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் கிர்கிஸ்தான் பயணம்


வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் கிர்கிஸ்தான் பயணம்
x

Image Courtesy : @DrSJaishankar

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று கிர்கிஸ்தான் நாட்டுக்கு சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிர்கிஸ்தானின் தலைமையின் கீழ் நடைபெறும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்திற்கான இந்திய குழுவை வழிநடத்த, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும், கிர்கிஸ்தான் அரசின் உயர்மட்ட தலைவர்களையும் சந்தித்து பேசுவார்" என தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கிய மாநாடு, 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story