மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு.!


மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு.!
x

கலவரம் எதிரொலியால், மணிப்பூரில் இணைய சேவை தடை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்,

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்க மணிப்பூரில் இணைய சேவை தடை ஜூன் 30 ஆம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.


Next Story