2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 Sept 2023 5:09 PM IST (Updated: 30 Sept 2023 5:13 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 7-ந்தேதி வரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அல்லது வங்கி கணக்குகளில் திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த மே 10-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக கடந்த 1-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story