மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்; ஷிண்டே, பட்னாவிசுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை


மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்; ஷிண்டே, பட்னாவிசுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை
x

மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் பற்றி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பி பா.ஜ.க.வுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து உள்ளார்.

கடந்த 30ந்தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பில், மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் பற்றியும் மற்றும் பா.ஜ.க., சிவசேனா இடையேயான அதிகார பகிர்வு பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதனை தொடர்ந்து ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் இருவரும் நட்டாவிடம் இருந்து விடை பெற்று கொண்டு சென்றனர்.


Next Story