ரெயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு - நிர்மலா சீதாராமன்


ரெயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு - நிர்மலா சீதாராமன்
x

கோப்புப்படம் 

மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தலைநகர் டெல்லியில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே வகையான 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்கவேண்டும். மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.

ரெயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகன சேவை, பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story