அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றம் சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சிகள் அமளி


அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றம் சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
x

அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக கூறி சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

சிக்கமகளூரு;


எதிர்க்கட்சியினர் அமளி

சிக்கமகளூரு நகரசபை மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை நடந்தது. இந்த மாதாந்திர கூட்டத்தை நகரசபை தலைவர் வேணுகோபால், கமிஷனர் பசவராஜ் தொடங்கி வைத்தனர். அப்போது நகரசபையில் எதிர்வரும் நலத்திட்டங்கள் குறித்தும், இதுவரை நடந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கவுன்சிலர் குமார் என்பவர் எழுந்து நகரசபை தலைவர் நலத்திட்டங்கள் குறித்து முறையாக ஆலோசிப்பது இல்லை.

இதுவரை 26 நலத்திட்டங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அவமதிப்பது போன்று உள்ளது. எனவே நகரசபை தலைவரின் நடவடிக்கை மற்றும் திட்டங்களை ஏற்று கொள்ள முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

26 திட்டங்கள் தரமானது


இதை தொடர்ந்து பேசிய நகரசபை காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் லட்சுமணன் என்பவர் கூறும்போது:-

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிக்கமகளூருவில் நடந்த மருத்துவ மேளாவிற்கு நகரசபை சார்பாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இது எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நடந்த முகாம். நகரசபை ஏன் பணம் வழங்கியது. இது எந்த வகையில் நியாயம். எந்த கணக்கில் அந்த பணத்தை வழங்கினார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நகரசபை தலைவர் வேணுகோபால் பதில் கூறினார். அப்போது அவர் அனைத்து திட்டங்களும் நகரசபை கவுன்சிலர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது. 26 வளர்ச்சி திட்டப்பணிகள் தரமான வேலைப்பாடுகள். இதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.


Next Story