ஆசிரியர் தேர்வுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம்


ஆசிரியர் தேர்வுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆசிரியர் தேர்வுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு:


கர்நாடக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர். 2 பிரிவுகளாக நடத்தப்படும் இந்த தேர்வு மூலம் தகுதி பெறும் ஆசிரியர்களை, காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவர். இந்த தேர்வு கர்நாடகத்தில் 589 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 1½ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கர்நாடகத்தில் தற்போது 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் பணியில் பள்ளி கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.


Next Story