பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்
பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும் திமுக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், " எதிர்க்கட்சி கூட்டம் நடக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை தொடங்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே திட்டத்தை பாஜக செயல்படுத்துகிறது" என்று விமர்சித்துள்ளார்.
Related Tags :
Next Story