தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக 9 யானைகள் வருகிற 4-ந்தேதி மைசூரு வருகை
தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக 9 யானைகள் வருகிற 4-ந்தேதி மைசூருவுக்கு கொண்டு வரப்படுகிறது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மைசூரு:
தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக 9 யானைகள் வருகிற 4-ந்தேதி மைசூருவுக்கு கொண்டு வரப்படுகிறது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மைசூரு தசரா விழா
அரண்மனை நகரம், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.
10 நாட்கள் நடக்கும் தசரா விழாவால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் யானை ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு 14 யானைகள் கலந்து கொள்கின்றன. இந்தநிலையில் தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு நாகரஒலே, பந்திப்பூர், குடகு மாவட்டம் துபாரே ஆகிய முகாம்களில் கர்ப்ப பரிசோதனை மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கரிகாலன் கூறுகையில், இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்க உள்ளன. முதற்கட்டமாக 9 யானைகளை வருகிற 1-ந் தேதி நாகரஒலே வனப்பகுதியில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 யானைகள் மைசூரு வருகை
அதனை அந்த 9 யானைகள் உன்சூர் தாலுகா நாகரஒலே வீராஒசஹள்ளியில் இருந்து மைசூரு அசோகபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து 9 யானைகள் பாரம்பரிய முறைப்படி 4-ந் ே்ததி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது. அங்கு யானைகளுக்கு பல்வேறு பூஜைகள் நடக்கிறது. அரண்மனை வளாகத்தில் கோட்டை அருகே 9 யானைகள் தங்கும் வகையில் 2கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பாகன்கள் தங்குவதற்கும், மருத்துவ சிகிச்சைக்காக தற்காலிக செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு யானைகளுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இவ்வாறு வனத்துறை அதிகாரி கரிகாலன் கூறினார்.