எலெக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


எலெக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 April 2023 12:15 PM IST (Updated: 2 April 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர், தம்பியை இழந்த சோகத்தில் எலெக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப் ‘ஸ்டேட்டசில்’ பதிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

மங்களூரு-

பெற்றோர், தம்பியை இழந்த சோகத்தில் எலெக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப் 'ஸ்டேட்டசில்' பதிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

எலெக்ட்ரீசியன்

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா இசிலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரெனிஷ் (வயது 27). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். ரெனிசின் தம்பியும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரெனிஷ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் அந்தப்பகுதியில் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

போதிய வருமானம் இல்லாததாலும், தனிமையில் இருந்ததாலும் ரெனிஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். அவர் தனது நண்பர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து ரெனிஷ் வீட்டுக்கு வந்துள்ளார்.

தற்கொலை

மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர்தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் தற்கொலை செய்ய போவதாக ஸ்டேட்ட ஸ் ைவத்திருந்தார். அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததால், விளையாட்டாக வைத்திருக்கலாம் என ரெனிசின் நண்பர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், ரெனிஷ் தற்கொலை செய்துகொண்டது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லியாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெற்றோர், தம்பியை இழந்து தனிமையில் இருந்ததால் மனமுடைந்து ரெனிஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story