ராகுல், பிரியங்கா காந்தி சென்ற இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி; பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கிண்டல்


ராகுல், பிரியங்கா காந்தி சென்ற இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி; பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கிண்டல்
x

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சென்ற இடம் எல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருவதாக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.

பாகல்கோட்டை:

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சென்ற இடம் எல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருவதாக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.

அருண்சிங் பேட்டி

பாகல்கோட்டை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்காகாந்தி முன்நின்று நடத்தினார். அப்போது சில பொய்யான உத்தரவாதத்தை அவர் அளித்தார். இதனால் மொத்தமுள்ள 403 இடங்களில் அக்கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது தான் காங்கிரசின் சாதனை என காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் ஏற்கனவே முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது முழுமை பெறாது.

ராகுல், பிரியங்கா சென்ற இடம் எல்லாம் தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பிரசாரம் செய்து வருவதுடன், உத்தரவாதம் வழங்கி வருகிறார்கள். அது பொய்யான உத்தரவாதம். இருவரும் எந்த மாநிலத்திற்கு சென்று பிரசாரம் செய்தார்களே அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் அக்கட்சி தோல்வி அடையும்.

ஏழைகளின் நலனை காக்கவும், நடுத்தர மக்களை மேம்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரை லிட்டர் நந்தினி பால் இலவசம், 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். மேலும் கர்நாடகத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளது. இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளோம். எந்த மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி உள்ளதோ அந்த பகுதிகளில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story