வாட்ஸ் அப்பில் பரவும் தேர்தல் தேதி போலியானது - தேர்தல் ஆணையம் விளக்கம்


வாட்ஸ் அப்பில் பரவும் தேர்தல் தேதி போலியானது  - தேர்தல் ஆணையம் விளக்கம்
x

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ் அப்பில் வரும் செய்திகள் போலியானவை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில் , 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ் அப்பில் வரும் செய்திகள் போலியானவை என்றும் முறையான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story