தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது: அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு
இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தெலங்கானா,
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தெலங்கானா சட்டசபை தேர்தலுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்து உள்ளார். வாக்குப்பதிவு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று(நவ. 28) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொது வெளியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது நடப்பது உள்ளிட்ட பணிகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.