ஜனாதிபதியுடன் மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினர்
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினர். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சொல்லப்படுகிறது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மராட்டியத்தின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியையும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது
Related Tags :
Next Story