ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு: மேற்கு வங்காள முன்னாள் மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை


ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு: மேற்கு வங்காள முன்னாள் மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
x

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக, மேற்கு வங்காள முன்னாள் மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள கல்வித்துறை இணை மந்திரியாக இருந்தவர் பரேஷ் அதிகாரி. இவரது பதவிக்காலத்தில் ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

மேலும் இவரது மகள் அங்கிதாவை சட்ட விரோதமாக அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக நியமித்தது தெரியவந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கிதாவை பணி நீக்கம் செய்ததுடன் அவர் வாங்கிய சம்பளத்தை திரும்ப அளிக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் மாநில மந்திரிசபையை மாற்றியமைத்தபோது, பரேஷ் அதிகாரியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக பரேஷ் அதிகாரியிடம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில பல மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இது திரிணாமுல் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story