துப்புரவு தொழிலாளியின் ரூ.1.88 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
துப்புரவு தொழிலாளியின் ரூ.1.88 கோடி சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
ஒடிசாவில் புரி மாவட்டத்தில் கூடுதல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு உதவியாளராக அரசுப்பணியில் இருந்தவர் லிங்கராஜ் ஜெனா. இவர் வருமானத்தை மீறி ரூ.1 கோடியே 88 லட்சம் சொத்துகள் குவித்ததாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வழக்கு அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. லிங்கராஜ், குற்றச்செயல்கள் மூலம் திரட்டிய பணத்தை சொத்துகளில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில், லிங்கராஜ் ஜெனாவுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
Related Tags :
Next Story