அரியானாவில் சட்டவிரோத சுரங்க வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது


அரியானாவில் சட்டவிரோத சுரங்க வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது
x

சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகார்,

அரியானாவில் யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான பணமோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சோன்பத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. மேலும் அவரது மகனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேந்தர் காங்கிரசை சேர்ந்த அரியானா முன்னாள் முதல்-மந்திரியும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story