சத்தீஷ்காரில் மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது


சத்தீஷ்காரில் மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
x

மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பா.ஜனதா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றதும், மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபான ஊழல் நடந்தாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

முன்னாள் கலால் துறை மந்திரி கவாசி லக்மா, முன்னாள் தலைமைச் செயலாளர் விவேக் தாந்த் உள்பட 70 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதனிடையே அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநிலத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாஷ் துதேஜா என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்ததது. அதன் பேரில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் முடிவில் அவரை கைது செய்தனர்.


Next Story