மேகாலயாவில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
அகர்தலா,
மேகாலயா மாநிலத்தின் தூப்ரி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Related Tags :
Next Story