அந்தமான் நிகோபார் தீவில் மீண்டும் நிலநடுக்கம்


அந்தமான் நிகோபார் தீவில் மீண்டும் நிலநடுக்கம்
x

நிகோபார் தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

புதுடெல்லி,

அந்தமான் நிக்கோபர் தீவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், திடீர் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சினர். கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

அடிக்கடி நிலநடுக்கம் ஏன்: அந்தமான்- நிக்கோபார் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. அது பூமியில் அமைந்துள்ள இடம் காரணமாகவே நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் அது அதிகம் பாதிக்கப்படுகிறது.


Next Story