துர்கா பூஜை: மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10 வரை அரசு விடுமுறை நாட்கள்


துர்கா பூஜை:  மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10 வரை அரசு விடுமுறை நாட்கள்
x

துர்கா பூஜைக்காக வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.



கொல்கத்தா,



மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை பெறுவார்கள் என பானர்ஜி அறிவித்து உள்ளார்.


Next Story