கட்சி மேலிடத்தின் நெருக்கடியால்முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை


கட்சி மேலிடத்தின் நெருக்கடியால்முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 PM IST (Updated: 27 Feb 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

கட்சி மேலிடத்தின் நெருக்கடியால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை என எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு-

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரி பதவியை நானாக தான் ராஜினாமா செய்தேன். கட்சி மேலிடத்தின் நெருக்கடிக்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதே போல் தேர்தல் அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளேன். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவையும் நானே தான் எடுத்துள்ளேன். இதுகுறித்து கட்சி மேலிடம் எதுவும் கூறவில்லை. கட்சி மேலிடம் கூறினாலும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நான் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவேன். சட்டசபை தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து அதிக தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைக்க பாடுபடுவேன். இதன் மூலம் மோடியை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வேன். சிவமொக்காவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அந்த விமான நிலையம் எனது பிறந்த நாளில் திறக்கப்படுகிறது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story