சிக்கமகளூருவில் தொடர் கனமழையால் ஹேமாவதி, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிக்கமகளூருவில் தொடர் கனமழையால் ஹேமாவதி, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கமகளூரு;
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பெய்து ஒய்ந்தது. இந்த கனமழைக்கு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்கிறது. குறிப்பாக மலைநாடு, கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. தொடர் கனமழை காரணமாக துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஒன்னம்மன் அருவி, கல்லத்தி அருவி, ஹெப்பே அருவி மற்றும் முக்கிய குளங்களான அய்யனகெரே, மதுக்கத்தே குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story