பீரூர் ரெயில் நிலையத்தில் சிக்னலை மாற்றியதால் டிராக் மாறிய சிவமொக்கா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதிர்ச்சி


பீரூர் ரெயில் நிலையத்தில் சிக்னலை மாற்றியதால் டிராக் மாறிய சிவமொக்கா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பீரூர் ரெயில் நிலையத்தில் சிக்னலை மாற்றியதால் சிவமொக்கா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் டிராக் மாறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்கமகளூரு-

பீரூர் ரெயில் நிலையத்தில் சிக்னலை மாற்றியதால் சிவமொக்கா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் டிராக் மாறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்னல் மாற்றம்

பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் சிவமொக்காவை நோக்கி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் சிக்கமகளூரு மாவட்டம் பீரூர் வழியாக சிவமொக்காவுக்கு செல்லவேண்டியிருந்தது. இந்த நிலையில் பீரூர் ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்கள், சிக்னலை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது சிவமொக்காவிற்கு ரெயில் செல்வதற்கு தண்டவாளத்தை மாற்றி அமைப்பதற்கு பதிலாக, உப்பள்ளிக்கு திருப்பி விட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பயணிகள் உடனே ரெயிலில் இருந்த கார்டு மற்றும் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு, பின்னர் மாற்று என்ஜின் மூலம், பீரூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது. பின்னர் அங்கு சிக்னல் சரி செய்யப்பட்டு, 2 மணி நேர தாமத்திற்கு பின்னர் சிவமொக்காவை நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பீரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

மேலும் சில ரெயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. அதன்படி பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சென்ற பயணிகள் ரெயில், பெலகாவி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ரெயில்கள் இரண்டும் பானாவாரா, அரிசிகெரேயில் உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த ரெயில்கள் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் குறித்து ரெயில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிக்னலில் பழுது ஏற்பட்டதால், ரெயில் மாற்று பாதையில் செல்ல நேர்ந்ததாக தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story