காரில் கடத்திய ரூ.2½ லட்சம் போதைப்பொருள் பறிமுதல்


காரில் கடத்திய ரூ.2½ லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் காரில் கடத்திய ரூ.2½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு :-

வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் கோனஜே போலீசார் நேற்று முன்தினம் படனூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், டிரைவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர்.

ரூ.2½ லட்சம் போதைப்பொருள்

அப்போது அவர் மங்களூருவை சேர்ந்த அசார் சாதிக் (வயது 35) என்பதும், பெங்களூருவில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர், எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை மங்களூரு மற்றும் கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கார், செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story