பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா


பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா
x
தினத்தந்தி 7 Nov 2023 2:17 PM IST (Updated: 7 Nov 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

பிரலே ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எந்த எதிரி தளத்தையும் குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டது.

புவனேஷ்வர்,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய 'பிரலே' ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

பிரலே ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எந்த எதிரி தளத்தையும் குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 350 முதல் 700 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

அதிவேகமான தாக்குதல், துல்லியமான இலக்கை அடைதல் போன்றவற்றை கொண்டு பிரேத்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது பிரலே ஏவுகணை. நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ஏவினால் சீனாவின் பதுங்கு குழிகள், பீரங்கிகள் போன்றவற்றை அழித்துவிடலாம்.


Next Story