சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ : எதிர்கட்சிகள் கண்டனம்


சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ : எதிர்கட்சிகள் கண்டனம்
x
தினத்தந்தி 19 April 2024 11:28 AM GMT (Updated: 19 April 2024 11:37 AM GMT)

அரசின் செய்தி சேனலில் நிறத்தை மாற்றியதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் (டிடி இந்தியா நியூஸ் சேனல்) லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தற்போது தூர்தர்ஷன் (டிடி இந்தியா நியூஸ் சேனல்) லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் தூர்தர்ஷனின் லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.


Next Story